Monday 6th of May 2024 09:17:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
மௌனம் கலைத்தது சீனா: ஜோ பைடன் கமலா ஹரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிப்பு!

மௌனம் கலைத்தது சீனா: ஜோ பைடன் கமலா ஹரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிப்பு!


அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற்ற ஜே பைடனுக்கு மற்றும் துணை ஜனாதிபதியாகவுள்ள கமலா ஹரிஸ் ஆகியோருக்கு சீனா இன்று வாழ்த்துத் தெரிவித்து.

ஜனாதிபதித் தேர்தலில் பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் சா்வதேச நாடுகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

எனினும் இன்றுவரை சீனா வாழ்த்துத் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது.

இ்ந்நிலையில் இன்று அரிசோனாவில் வெற்றிபெற்றதன் மூலம் பைடனின் வெற்றி சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே ஜே பைடனுக்கு மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோருக்கு சீனா இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

தோ்தலில் அமெரிக்க மக்களின் விருப்பத்தை சீனா மதிப்பதாக சீன வெளிவவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் அந்நாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி தீர்மானிக்கப்படும் என்ற பீஜிங்கின் முந்தைய நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


Category: உலகம், புதிது
Tags: சீனா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE